2020-06-17 887

கடமையாக்கப்பட்ட தொழுகையின் பின் தனியாக கையேந்திப் பிரார்த்திப்பது நபி வழியா

கடமையாக்கப்பட்ட  தொழுகையின் பின் தனியாக கையேந்திப் பிரார்த்திப்பது நபி வழியா 

எந்த ஒரு விடயத்தையும் நபி (ஸல் ) அவர்களின் சுன்னத் என்று தீர்ப்புக் கொடுப்பதென்றால் அதற்கு தெளிவான ஆதாரம் இருக்கவேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆதாரம் இல்லாத வேளையில் ரஸூலுல்லாஹ்வின் ஸுன்னா என்று ஒன்றைக் கூறுவது நபி (ஸல் ) அவர்க்ளின் மீது பொய்கூறும் பெரும் பாவத்துக்கு எம்மை இட்டுச் சென்று விடும் இந்த அடிப்படையை மனக் கண்  முன் வைத்துக் கொண்டு இக்கேள்விக்கான விடையைக் காண்போம் .

நபி (ஸல் ) அவர்கள் பர்ளான தொழுகையை தொழுது முடித்த பின் அவ்விடத்தில் உட்க்கார்ந்து தம் இரு கைகளையும் ஏந்தி தனியாகவோ அல்லது கூட்டாகவோ பிரார்த்தனை செய்தார்கள் என எந்த ஒரு ஆதாரமான ஹதீஸிலும் வரவில்லை.

மாறாக பர்ளான தொழுகையைத் தொழுது முடித்தபின் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்   என்பதை தௌபான் (ரழி ) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள். 

``நபி (ஸல்)அவர்கள் தொழுகையை முடித்துவிட்டால் (அஸ்தஃ  பிருல்லாஹ் ) என்று மூன்று விடுத்தம்  அல்லாஹ்விடத்தில் பிழை பொறுக்கத்  தேடுவார்கள். மேலும் அல்லாஹும்ம அந்தஸலாமு வமிங்கஸ்ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல்  இக்ராம்   என்று கூறுவார்கள் (ஆதாரம் முஸ்லிம் )

இதே முஸ்லிம்  கிரந்தத்தில் ஆயிஷா (ரழி ) யைத் தொட்டும் மறறொரு  அறிவிப்பில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது 

நபி (ஸல்)அவர்கள் ஸலாம் கொடுத்துவிடடால் பின்வரும் துஆவைக்  கூறுகின்ற அளவிற்கே தவிர அவ்விடத்தில் உட்கார மாட்டார்கள் 

அல்லாஹும்ம அந்தஸலாமு வமிங்கஸ்ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல்  இக்ராம்

இவ்விரண்டு ஹதீஸ்க்களையும் ஒன்றிணைத்து நாடு நிலமையாக சிந்திப்பவர் நபி (ஸல்)அவர்கள் தொழுது முடித்ஹட பின்னர் இமாமாக இருக்கும் நிலையிலும் தனியாகவோ அல்லது கூட் டாகவோ அவ்விடத்தில் இருந்துகொண்டு கையேந்திய நிலையில் பிரார்த்திப்பார் என்று ஒருபோதும் கூறமாட் டார்

எனவே இமாமாக தொழுகின்ற ஒருவர் மேற்குறிப்பிட் ட துஆக்களை கூறுகின்ற அளவிற்கே அவ்விடத்தில் உட்க்கார்ந்துவிட்டு பின்னர் எழும்பிவிடுவதே நபி வழியாகும் இது இமாமுக்குக்குரிய சுன்னாவாகும் 

ஆனால் மஹ்மூம்கள் தொடர்ந்தும் தொழுத இடத்தில் இருந்துகொண்டு ஆதாரமான ஜஹதீஸ்களில் வந்த சுப்ஹானல்லாஹ் அல்  ஹம்துலில்லாஹ் போன்ற நபி (ஸல் ) அவர்களால் கற்றுக் கொடுக்கப்படட ஏனைய திக்ருகளை  கூறிக் கொள்வார்கள் இமாம் மட்டும் நபிகளாரைப் போன்று தொழுத இடத்தை விட்டு எழும்பிய  பின்னர் ஏணைய  அவ்ராதுகளை எங்கிருந்தும்  ஓதிக்கொள்வார்