பிரயாணிக்கு எது சிறந்தது? நோன்பை நோற்பதா? அல்லது விடுவதா?
ஒரு பிரயாணி நோன்பு நோற்ற நிலையில் பிரயாணம் செய்யலாமா? இல்லையா? என்கின்ற விடயத்தில் பல கேள்விகள் நமக்கு மத்தியில் எழுகின்றன.
அல்லாஹ் குர்ஆனில் சூரத்துல் பகரா :185 ஆவது வசனத்தில் பின்வருமாறு கூறுகின்றான்.
"............ எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) வேறு நாட்களில் நோற்கட்டும்
ஆகவே இந்த நிலையில் நோன்பை நோற்பது சிறந்ததா? அல்லது விடுவது சிறந்ததா? அல்லது நோற்கவே கூடாதா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
ஒரு பிரயாணி பிரயாணத்தில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதனால் அல்லாஹ் நோன்பை விடும் சலுகையை வழங்கியுள்ளான். ஆகவே அவர் விரும்பினால் நோன்பை விடலாம். பின்னர் அதனை வேறு நாட்களில் நோற்றுகொள்வார் என்பதனை இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது. மேலும் பின்வரும் ஹதீஸும் இதனை உணர்த்துகின்றது.
ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் :
ஹம்சா இப்னு அம்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம்இ "பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?" என கேட்டார். அவரோ அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நீ விரும்பினால் நோன்பு நோற்று கொள்; நீ விரும்பினால் விட்டு விடு" என்றார்கள். (புகாரி : 1943)
அதேபோல் அவர் நின்பு நோற்பது குற்றமா ? என்றால் அவர் தாராளமாக நோன்பு நோட்கலாம். அது அவருக்கு குற்றமாகாது. இதனை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் :
"நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணத்தில் இருந்தோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும்; நோற்காதவரை நோற்றவரும் குறைகூறவில்லை". (புகாரி : 1947)
அவ்வாறே ஒருவர் பிரயாணத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இயலாமைக்கு உற்படுவார்இ இன்னல்களை சந்திக்க நேரிடும் என்றிருந்தால் அவர் நோன்பு நோற்காமலிருப்பது சிறந்தது பின்வரும் ஹதீஸில் குறிப்பிடுகிறது.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோதுஇ ஒருவர் நிழலில் தங்கவைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததை கண்டார்கள். இவருக்கு என்ன நேர்ந்தது? என கேட்டார்கள். இவர் நோன்பு நோற்றிருக்கிறார் என மக்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "பயணத்தில் நோன்பு நோற்பது நல்ல விடயம் அல்ல" என்று கூறினார்கள். (புகாரி : 1946)
ஆகவே இவைகள் மூலம் பிரயாணி நோன்பு நோற்காமலிருப்பது சலுகைஇ மேலும் நோற்றால் குற்றமில்லைஇ மேலும் நோன்பு நோற்பதன் மூலம் கஷ்டமான நிலை அவருக்கு ஏற்படலாம் அல்லது அவரது வேலைகள் தடைப்படலாம் என்றிருந்தால் அவர் நோன்பை விடுவது சிறந்ததாகும் என்பவை எமக்கு தெளிவாகின்றது.
இவற்றில் எதை எடுப்பது என்பதை நிலைமைக்கு ஏற்ப நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
மேலும் குறிப்பாக அல்லாஹ் ஒரு விடயத்தில் தனது அடியார்களுக்கு சலுகை வழங்கினால் அந்த அடியான் அந்த சலுகையை எடுத்து கொள்வதனை ஒரு கடமையான செயலை செய்வதை விரும்புவதை போன்று இதனையும் விரும்புகின்றான் என்பதனை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.
ஆகவே எமது உடல்நிலைஇ சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்திற்கொண்டு இதனை நாம் தீர்மானிக்க முடியும்.
அதே போன்று ரமலான் மாதம் பாக்கியம் நிறைந்த காலம் அந்த காலத்தில் நோன்பை விட்டால் எமது பாக்கியம் குறைந்துவிடும் என்ற ஒரு எண்ணப்பாடும் எமக்கு மத்தியில் உள்ளது.
ஆனால் அது அவ்வாறல்ல. நாம் ரமலானில் விட்ட நோன்பை தான் ரமலான் அல்லாத காலத்தில் நோற்கின்றோம். இரண்டிற்கும் கூலி ஒன்று தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே நம்மை நாமே வருத்திக் கொள்ளாத அளவு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சலுகைகளை புரிந்து அதனை சரியான அடிப்படையில் நடைமுறைப்படுத்த அல்லாஹ் அருள்புரிவானாக!!
பதில் : மௌலவி ஆஐ. அன்சார் (தப்லீகி)
அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி).
எழுத்தாக்கம் : உம்மு டீபஹிய்யா ஷரயிய்யா