2022-11-24 1182

ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?

கேள்வி: ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?  

பதில்:- ஆண்கள் வெள்ளியாலான மோதிரங்கள் அணிகின்றனர். அதேபோன்று அவர்கள் வெள்ளியாலான மாலைகளையும் அணியலாமா? என்று கேள்விகள் கேட்கப்படுகின்றன.

அதனோடு சேர்த்து, ஆண்கள் தம் காதுகளிலும் ஆபரணங்கள் அணியலாமா? என்றும் கேள்விகள் கேட்கப்படலாம். ஏனெனில் தற்காலத்தில் ஆண்கள் தம் காதுகளை குத்தி அவற்றில் ஆபரணங்கள் அணிவதைக் காணமுடியுமாக இருக்கின்றது.

எனவே இது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன?, மற்றும் இஸ்லாம் இவற்றை அனுமதிக்கின்றதா? என்பதைப் பார்ப்போம்.

அனஸ் (ரழியல்லாஹ_ அன்ஹ_) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்களின் மோதிரம் வெள்ளியாலானதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) குமிழும் வெள்ளியாலானதாகவே இருந்தது.

(ஆதாரம்: ஸஹீஹல் புஹாரி -5870)

ஆக நபி (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றையே அணியக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள். இதன் பிரகாரம் மோதிரம் அணிவதென்பது ஆண்களுக்கு அனுமதியான விடயம் தான் என்பதை நபி(ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்களின் இவ் வழிமுறையில் இருந்து விளங்கிக் கொள்ளமுடிகின்றது.

இது தவிர்ந்து ஒரு ஆண் பெண்களுக்கென்று தனித்துவமான ஒருசில பண்புகளை எடுத்துக்கொள்வதும் இன்னும் ஒரு பெண் ஆண்களுக்குரிய தனித்துவமான பண்புகளை எடுத்துக் கொள்வதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட விடயங்களாகும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹ¬_ அன்ஹ_) அவர்கள் அறிவித்தார்கள்: இறைத்தூதர் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்பவர்களையும்

பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள். (ஆதாரம்: ஸஹீஹ_ல் புஹாரி -5885)

அதுமட்டுமன்றி ஒரு ஆண்  ஒரு பெண்ணைப் போன்று ஆடை அணிவதையும் ஒரு பெண் ஒரு ஆணைப் போன்று ஆடை அணிவதையும் அல்லாஹ் வெறுக்கிறான். இது பாவகாரியமாகும். மேலும் சபிக்கப்பட்ட ஒரு விடயமும் கூட இதைப்போன்று தான் ஆண்கள் நகை அணிவதென்பதும். ஏனெனில் நகை அணிதல் என்பது பெண்களுக்குரிய ஒரு தனித்துவமான பண்பாக இருப்பதால் ஒரு ஆண் தன் கழுத்தில் மாலையும்இ காதில் காதுப்பூ (மின்னி) அணிவதென்பதும்

பெண்களுக்கு ஒப்பாகக் கூடிய செயலாக மாறுகின்றது என்பது மட்டுமல்லாமல்  நபி(ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்களின் சாபத் திற்கு இட்டுச்செல்லக்கூடிய விடயமாகவும் இருக்கின்றது. எனவே இத்தவறான காரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

இதேபோன்றுதான்  பெண்கள் முடிகளை மிக நீளமாக வளர்ப்பதைப் போன்று ஆண்கள் முடி வளர்ப்பதும்.

இதுவும் மார்க்கத்தில் அனுமதியில்லாத ஒரு செயலாகும்.

ஆனால் இக்கால கட்டங்களில் ஆண்களில் சிலர் பெண்களைப் போன்று முடிகளை வளர்ப்பதை பார்க்கின்றோம். ஆக இது போன்ற பெண்களுக்கு ஒப்பாகக் கூடிய செயல்கள் அனைத்தும் இஸ்லாம் அனுமதிக்காத ஹராமான விடயங்களிலிருந்தும் இருக்கின்றன என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்தோடு சிறுகுழந்தைகளுக்கு வெள்ளி ஆபரணங்கள் அணிவிப்பது கூடுமா கூடாதா என்பது பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்..

 

பதில் : மௌலவி M.I. அன்சார் (தப்லீகி)

அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம் : உம்மு அப்தில்லாஹ் (ஷரயிய்யா)