அகீகாவிற்காக அறுக்கப்படும் ஆட்டிறைச்சியை யார் யாருக்கு கொடுப்பது?
அகீகாவிற்காக அறுக்கப்படும் ஆட்டிறைச்சியை யாருக்குக் கொடுப்பது? அவ் விறைச்சியின் மூன்றில் ஒருபங்கை ஏழைகளுக்கு கொடுப்பது அவசியமா?"
பதில்: அதாவது " துல் ஹஜ் மாதத்தின் அறியப்பட்ட நாட்களில் அறுக்கப்படும் குர்பானிப்பிராணிகளைப் பற்றிக் கூறும் போது அல்லாஹ் தன் திருமறையில் 22 ஆவது அத்தியாயத்தில் 28 ஆவது வசனத்தின் இறுதிப்பகுதியில் அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்! என்று கூறுகின்றான்.
ஆகவே அதேபோன்றுதான் நாம் அகீகா இறைச்சியை அறுத்து எழைகளுக்கு கொடுப்பதும் ,தர்மம் செய்வதும், நாம் சாப்பிடுவதும்.இவை அனைத்தும் இஸ்லாம் அனுமதித்த விடயங்களாகும். அதுமட்டுமல்லாமல் "அவ்விறைச்சியின் மூன்றில் ஒருபங்கை ஏழைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும்" என்று அகீகா விடயத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த நிபந்தனையையும் இடவில்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஆகவே ஆரம்பத்தில் கூறியதைப் போன்று அகீகா விடயத்தில் அறுக்கப்படும் ஆட்டிற்கான வயதெல்லை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் தெளிவாகவோ மறைமுகமாகவோ கூறப்படாத காரணத்தினால் நாம் ஆட்டை அறுப்பதே எமக்குப் போதுமானதாகும்.
அது வெள்ளாடாகவோ செம்பறி ஆடாகவோ மற்றும் ஆணாடாகவோ பெண்ணாடாகவோ இருக்கலாம். இன்னும் அது ஆறு மாத ஆடாகவோ அல்லது ஒரு வருட ஆடாகவோ அல்லது இரண்டு வருடம் பூர்த்தியான ஆடாகவோ இருக்கலாம்.நாங்கள் இதைப்பற்றி அதிகம் யோசித்து எங்களை நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவயில்லை.
அல்லாஹுத்தஆலா எம் அனைவருக்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டலோடு மட்டும் நின்று கொள்வதற்கு நல்லருள்பாலிப்பானாக. வஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லஹி ரப்பில் ஆலமீன்.
பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)
எழுத்தாக்கம் : உம்மு அப்தில்லாஹ் (ஷரயிய்யா).