2023-01-31 379
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் அதிக நன்மைகளுள்ளதா ?
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் அதிக நன்மைகளுள்ளதா ?
கேள்வி: வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் அதிக நன்மைகளுள்ளதா ? பதில்: முஸ்லிம் சகோதர சகோதரிகளில் சிலர் சுன்னத்தான நோன்புகளை நோற்று அல்லாஹ்வின் அருளை பெற வேண்டும் என எண்ணி பல சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்றுவருவதை காண்கின்றோம். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்பதை சிறப்பாக கருதி செய்து வருவதை காண முடிகிறது. இவ்வாறு வெள்ளிக்கிழமையை குறிப்பாக்கி சிறப்பாக கருதி நோன்பு நோற்பது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டலில் அனுமதியா என பார்க்கின்ற போது  சிறப்பாக கருதுவதற்கும் அப்பால் இந்நாளில் நோன்பு நோற்பதையே நபி (ஸல்லல்லாஹூ…
2023-01-23 443
பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா?
பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா?
கேள்வி: பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா? பதில் : அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி அஜ்மயீன் அம்மா பஃத் எமது சமுதாயத்தில் இன்று ஹஜ், உம்ரா கிரிகைகள் அதிகமானோரால் நிறைவேற்றப்பட்டு வருவதை பரவலாக நம்மால் காண முடிகிறது. ஆனால் அதிகமானோரால் வினவப்படும் கேள்வி தான் "ஒருவர் தன் உறவினர்களுக்காக (அவர்களுக்கு பகரமாக) தான் ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்ற முடியுமா?" என்பதாகும். இது தொடர்பாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து வந்த…
2023-01-06 594
பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா?
பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா?
கேள்வி: பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பிற்குரிய சகோதர  சகோதரிகளே! ஒரு சகோதரருடைய கேள்விக்கான பதிலை நாங்கள் பார்ப்போம். அதாவது,ஒரு சிலர் தம் வீடுகளில் செல்லமாகப் பறவைகளையும் பிராணிகளையும் வளர்த்து வருகின்றனர். இது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்டதா? இன்னும் அவ்வாறு வளர்க்கின்ற போது அவற்றின் உரிமைகள் பறிக்கப் படுவதாகக் கூறப்படுகின்றது.…
2022-12-27 453
நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?
நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?
கேள்வி: நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?. பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அல்லாஹ் தன் திருமறையில் சூரத்துல் பகராவின் 286 ஆவது வசனத்தில் "அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுக்கமாட்டான்" என்று கூறுகின்றான். எனவே, தள்ளாடும் முதுமையில் இருக்கக்கூடிய ஒருவருக்கு அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கவில்லை. கடமையில்லாத…
2021-12-21 731
ஜனாஸாவை குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா?
ஜனாஸாவை குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா?
கேள்வி பதில்கள்:- தனது சகோதரரின் ஜனாஸாவில் கலந்துகொள்வதென்பது ஒரு முஸ்லிம் தனது சகோதரருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகவும் மறுமையில் எமது நன்மையை அதிகரிக்கக் கூடிய விடங்களில் ஒன்றாகவும் உள்ளது என்பதை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் அந்த வகையில் ஜனாஸாவைக் குளிப்பாட்டும் காரியத்தில் ஈடுபட்டவர் மீது குளிப்பு கடமையா எனும் விடயத்தைப் பற்றி பார்ப்போம். " ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்ளட்டும் " என்ற அபூ ஹுரைரா (ரழி) அவர்களினூடாக அறிவிக்கப்பட்ட ஹதீதை ஆதாரமாகக் கொண்டால் குளிப்பாட்டியவர் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்வதற்கு முன்னர் குளித்தக்கொள்வது…
2021-06-29 287
பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா?
பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா?
வாசகர்களின் கேள்வி பதில் வினா: [பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா? விடை: சமகாலத்தில் உள்ள பிரச்சார அமைப்புக்களை இருவகைப்படுத்தலாம். முதலாவது:- தூயமார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் ஒழிவு மறைவின்றி, இயக்கவெறியின்றி, மத்ஹப் வாதமின்றி பிரச்சாரம் செய்யும் அமைப்புக்கள். இரண்டாவது;- மார்க்கத்தில் சில விடயங்களை மட்டும் பிரச்சாரம் செய்து கொண்டு இன்னும் சில விடயங்களை பிரச்சாரம் செய்யாமல் மௌனியாக இருக்கும் அமைப்புக்கள். இதில் முதலாம் தரப்பினருடன் சேர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை நாமும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யலாம். இரண்டாம் தரப்பினர் பின்வரும் வழி கேடான…