2021-03-11
416
கடனாக கொடுத்த தொகைக்கு ஸகாத் கடமையா?
2021-02-23
683
எனது மனைவிக்கு சொந்தமான காணியில் எனது பணத்தை செலவளித்து எனக்குரிய வீட்டை கட்டி அதில் நான் குடியிருக்கலாமா?

எனது மனைவிக்கு சொந்தமான காணியில் எனது பணத்தை செலவளித்து எனக்குரிய வீட்டை கட்டி அதில் நான் குடியிருக்கலாமா?
இந்தக் கேள்வியில் கூறப்பட்ட விடயம் எமது சமூகவழக்கில் சாதாரணமாக நடைபெறக் கூடிய விடயம். இவ்வழக்கு எம்சமூகத்தில் இருப்பதற்கு காரணம் கணவன், மனைவி தமக்கிடையே இருக்கும் சொத்துக்களை அல்லாஹ்வின் சட்டப்படிபிரித்துக் கொள்வதில்லை.
மாறாக மனைவியின் சொத்தை கணவன் தன்னுடைய சொத்தைப் போன்று உரிமை கொண்டாடுகின்ற ஓர் வழக்கு எமது முஸ்லிம் சமுதாயத்தில் வேர்பிடித்திருப்பதே இதற்குக் காரணம். அதனால் அவர்களுக்கிடையில் வாழ்க்கைப் பிரச்சினை ஒன்று ஏற்படாத வரை அதனை…
2020-09-16
1607
தஃவா இயக்கங்கள்

தஃவா இயக்கங்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் பல பெயர்களில் பல இயக்கங்கள் இயங்குகின்றன இக்கால கட்டத்தில் இயக்கம் சாராத தனி நபர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இயக்கங்களாகவும் தனி நபர்களாகவும் இயங்குகின்ற இவர்களுக்கிடையில் அவர்களின் பிரச்சாரப் பணியின் வழிமுறைகளில் பல்வேறுபட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த வழிமுறைகளில் உள்ள முரண்பாடுகள் இயக்கவெறியை பாரிய அளவில் தோற்றுவிப்பதற்கு காரணமாகவும் இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தீர்வு என்ன? அல்லாஹ் கூறுகிறான்: ஈமான் கொண்டோர்களே அல்லாஹ்விற்கும் (அவனுடைய) தூதருக்கும் உங்களில் அதிகாரமுடைய (அமீர்களுக்கும்) வழிபடுங்கள். ஏதேனும் ஓர் விடயத்தில் நீங்கள்…
2020-09-14
919
ஹதீஸ் கலை – குழப்பமும் விளக்கமும்

ஓரு ஹதீதை ழயீபானது என்று கூறினால் அதன் விளக்கம் அதன் அறிவிப்பாளர் தொடரில் ஓரு பலயீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார் என்பதே தவிர அந்த ஹதீஸ் ஆதாரமானதுதான், அது நபி(ஸல்) அவர்கள் கூறியதுதான், அந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதுதான் என்றே விளங்க வேண்டும் என சில மௌலவிமார்கள் கூறுவதை அவதானிக்கின்றோம்.
விளக்கம்
இவர்களின் இந்த கூற்று மிகவும் தவறானதாகும் எந்த ஓர் ஹதீஸ் கலை அறிஞரும் இவ்வாறு கூறவில்லை. ஹதீஸ் கலையைப் பற்றி அறியாதவர்களே இவ்வாறு கூறுவார்கள்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
பாவம் செய்யக்கூடிய (ஓர்…
2020-09-11
1064
வித்ருத் தொழுகையில் “குனூத்” ஓதுதல்

வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக ஹசன்(ரழி) அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஒரு ஹதீதை ஆதாரமாகக் கொண்டு பலரும் வித்ருத் தொழுகையில் குனூத் ஓதிவருகின்றனர். இந்த ஹதீதை பல இமாம்கள் ஆதாரமானது எனக் கூறினாலும் இமாம் இப்னு ஹுஸைமா, இமாம் இப்னு ஹிப்பான் போன்றவர்கள் ஆதாரமாக கருதவில்லை.
இந்த ஹதீதை நாம் ஆய்வு செய்த போது எமது ஆய்விலும் வித்ரில் குனூத் ஓதுவது தொடர்பான செய்தி ஆதாரமற்றதாகவே தென்பட்டது. எனவே எமது ஆய்வை சுருக்கமாக மக்களுக்குத் தெரியபடுத்தும் முகமாக எமது கருத்தைப் பேசி வீசீடிகளை…
2020-09-02
1927
தப்ஸீர் கலையின் தோற்றம் - அல்குர்ஆன் விளக்கவுரை

தப்ஸீர் கலையின் தோற்றம்
அத்தப்ஸீர் எனும் அ.றபுப் பதத்திற்கு “விரிவுரை செய்தல்” எனப் பொருள்படும். என்றாலும் இச்சொல் அல்குர்ஆனிற்கு விளக்கவுரை செய்வதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அல்குர்ஆன் விளக்கவுரைக்கு “அத்தஃவில்” என்ற அறபுப் பதமும் பாவிக்கப்பட்டு வருகிறது.
அல்குர்ஆன் விளக்கவுரை – தோற்றமும் காரணிகளும்
அல்குர்ஆன் இறக்கப்பட்ட அந்த சமூகம் அறபியர்களாக இருந்ததால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை இலேசாக புரிந்துகொள்வதற்காக அவர்களின் தாய்மொழியான அறபிப் பாசையிலேயே அதனை இறைக்கிவைத்தான். இதைப்பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
எந்த ஒரு தூதரையும் (அவருடைய சமூகத்திற்கு)…
2020-08-06
1189
தொழுகை இல்லாத கணவருடன் தொடர்ந்து வாழ இஸ்லாம் அனுமதிக்கிறதா?

"எனது கணவன் தொழுகை விடயத்தில் மிகவும் பொடுபோக்காக இருக்கின்றார். இடையிடையே தொழுது கொள்கிறார். வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் "ஜூம்ஆ"விற்கு போகிறார். நான் அவருக்கு பலமுறை அறிவுரை கூறி விட்டேன். இவ்வாறான கணவனோடு நான் குடும்ப வாழ்க்கை நடத்தலாமா? நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்" என ஒரு சகோதரி கேட்கிறார்.
தொழுகை என்பது இஸ்லாத்தின் ஒரு தூண் ஆகும். தொழாதவர்கள் இருவகையினர்.
முதலாவது-”இஸ்லாத்தின் உச்சநிலையை அடைந்ததாகவும் இதனால் தொழுகை தேவையில்லை, உச்ச நிலையை அடையாதவர்களே தொழுவார்கள்” என்று சொல்பவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் "ஜமாஅத் அல்மூப்லிஹீன் "என அழைக்கப்படுவர். பயில்வான்…
2020-08-05
425
மரணித்த பெற்றோர்களுக்காக உளுஹிய்யா கொடுக்கலாமா.?
2020-07-29
561
உழ்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் ஒவ்வொரு நன்மையா?
2020-06-17
886
கடமையாக்கப்பட்ட தொழுகையின் பின் தனியாக கையேந்திப் பிரார்த்திப்பது நபி வழியா

கடமையாக்கப்பட்ட தொழுகையின் பின் தனியாக கையேந்திப் பிரார்த்திப்பது நபி வழியா
எந்த ஒரு விடயத்தையும் நபி (ஸல் ) அவர்களின் சுன்னத் என்று தீர்ப்புக் கொடுப்பதென்றால் அதற்கு தெளிவான ஆதாரம் இருக்கவேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆதாரம் இல்லாத வேளையில் ரஸூலுல்லாஹ்வின் ஸுன்னா என்று ஒன்றைக் கூறுவது நபி (ஸல் ) அவர்க்ளின் மீது பொய்கூறும் பெரும் பாவத்துக்கு எம்மை இட்டுச் சென்று விடும் இந்த அடிப்படையை மனக் கண் முன் வைத்துக் கொண்டு இக்கேள்விக்கான விடையைக் காண்போம் .
நபி (ஸல்…
2020-06-15
974
பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா ?

பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா ?சமகாலத்தில் உள்ள பிரச்சார அமைப்புக்களை இருவகைப் படுத்தலாம் .முதலாவது தூய்மையான மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் ஒளிவு மறைவின்றி இயக்க வெறியின்றி மத்ஹப் வாதமின்றி பிரச்சாரம் செய்யும் அமைப்புகள்.இரண்டாவது மார்க்கத்தில் சில விடயங்களை மட்டும் பிரச்சாரம் செய்துகொண்டு இன்னும் சில விடயங்களை பிரச்சாரம் செய்யாமல் மௌனியாக இருக்கும் அமைப்புக்கள். இதில் முதலாம் தரப்பினருடன் சேர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை நாமும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யலாம். இரண்டாம் தரப்பினர் பின்வரும் வழிகேடான காரணிகளில் ஏதேனும் ஒரு காரணத்தை கொண்டவர்களாக இருப்பர் 1.…